திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களில் எஸ்பி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, ஆரணி காவல் நிலையங்களில் மாவட்ட எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-12-23 08:29 GMT

வந்தவாசி காவல் நிலையத்தில்  ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, ஆரணி டிஎஸ்பி அலுவலகங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

வந்தவாசி டிஎஸ்பி அலுவலகம்,  தேசூர் காவல் நிலையம் ,  அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட 98 கிராமங்கள் உள்ளன. அவற்றை இரண்டாக பிரிக்கும் கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.  இக்கோரிக்கை அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வின்போது டிஎஸ்பி கோட்டீஸ்வரன்,  ரூபன் குமார்,  விஸ்வேஸ்வரய்யா , காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News