ஆரணியில் தீ தொண்டு வார விழா கருத்தரங்கு
ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே தீ விபத்து மற்றும் இடர்பாடுகளில் இருந்து பாதுகாப்பது குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.;
ஆரணியில் தீ தொண்டு வார விழா பள்ளி மாணவர்களுக்கிடையே தீ விபத்து மற்றும் இடர்பாடுகளில் இருந்து பாதுகாப்பது குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.
தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி உத்தரவின் பேரில் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கிடையே தீ விபத்து மற்றும் இடர்பாடுகளில் இருந்து பாதுகாப்பது குறித்து செயல்விளக்கம் மற்றும் கருத்தரங்கு நடந்தது. தீயணைப்பு படை வீரர்கள் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினர். பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி, பள்ளி நிர்வாக குழு முன்னாள் தலைவர் சங்கரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி: வந்தவாசி தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வி மைய முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். தீத்தொண்டு வாரம் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு வழிமுறைகள் குறித்தும் வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் குப்புராஜ் விளக்கினார். மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவர் மாணவர்களுக்கு வழங்கினார்.