தனியார் பள்ளி வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 மாணவர்கள் காயம்
வந்தவாசி அருகே தனியார் பள்ளி வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்;
பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பள்ளி வாகனம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தனியார் பள்ளி வேன் இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் சென்று போது, நிலை தடுமாறி தலைகுப்புற சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் தனியார் பேருந்தின் ஓட்டுநரும், வேனில் பயணம் செய்த 15 மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த மாணவர்கள் மற்றும் ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை