வந்தவாசியில் மாயமான பள்ளி ஆசிரியையை கண்டு பிடித்து தரக்கேரி சாலை மறியல்

வந்தவாசி அருகே மாயமான ஆசிரியையை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-21 11:08 GMT

மாயமான ஆசிரியையை கண்டு பிடித்து தரக்கோர சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

வந்தவாசி அருகே ஆசிரியையை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது பட்டதாரி ஆசிரியை. இவர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பள்ளியில் விசாரித்தபோது அங்கும் வரவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் தேடியும்                  கிடைக்காததால் ஆசிரியரின் தந்தை வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆசிரியையின் உறவினர்கள், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி திடீரென இன்று, வடக்கு போலீஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கணவன்-மனைவி கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி 5 கண் பாலம் அருகே வந்தவாசி-திண்டிவனம் சாலையில் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தனர். இதில் வந்தவாசி திண்டிவனம் சாலையை சேர்ந்த தேவேந்திரன் மது பாட்டில்களை கடத்தியது தெரிய வந்தது. அவரை கைது செய்தபோலீசார் 47 மதுபாட்டிகள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை செய்தபோது பதுக்கி வைத்திருந்த 120 மது பாட்டில்களை கைப்பற்றினர்.

மேலும் அவரது வீட்டில் சோதனை செய்தபோது அவரது மனைவி சைதானி என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் சைதானியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தேவேந்திரன் இதய நோயாளி என்பதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Tags:    

Similar News