ஆரணி ஆற்றில் தொடர் மணல் கொள்ளை
மணல் கடத்தி வருவதாக பகுதி மக்கள் விவசாயிகள் போலீசாருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை;
பெரியபாளையம் அருகே ஆரணி -மங்கலம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் பட்டப் பகலில் தொடர் மணல் கொள்ளை நடப்பதையும் பிளாஸ்டிக் கோணிகளில் சிலர் மணல் கடத்தி விற்பனை செய்வதையும் தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி-மங்கலம் இடையே ஆரணி ஆறு செல்கிறது. இப்பகுதியில் உள்ள ஆற்றில் சிலர் பிளாஸ்டிக் கோணிகள் மூலம் சில நாட்களாக பட்டப் பகலிலே தொடர்ந்து மணல் கடத்தி வருவதாக பகுதி மக்கள் விவசாயிகள் போலீசாருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை கூறப்படுகிறது. இதனை எடுத்து ஆரணி ஆற்றின் கரையை உடைத்தும் அதிலிருந்து அதிக அளவில் நாள் ஒன்றுக்கு சுமார் 200 முதல் 500 மூட்டைகள் வரை மணல் எடுத்து இனி மினி வேன்களில் மற்றும் ஆட்டோகளில் வைத்து ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும் இதனை தடுக்க வேண்டிய போலீசார் கண்டுகொள்ளாத செல்கின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது எனவே இது போன்று மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்களும் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.