வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகதத்தை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்
வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.;
வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகதத்தை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்
வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் முன்னிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.
அப்போது போக்குவரத்து துறை ஊழியர்கள் அரசு போக்குவரத்து பணிமனை சேறும் சகதியுமாக இருப்பதால் சிமெண்ட் தளம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நகராட்சி ஆணையர் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.