ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Tiruvannamalai Collector News Today - கீழ்கொடுங்காலூர் கிராமத்தில் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் கட்டிய 42 வீடுகள், 18 கடைகள் அகற்றப்பட்டன.;

Update: 2022-09-07 10:05 GMT

 ஏரி நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்ட காட்சி.

Tiruvannamalai Collector News Today -வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் சிலர் வீடு, கடைகள் உள்ளிட்டவை கட்டி கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு, கடைகள் உள்ளிட்டவற்றில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து 4 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி  காலை தொடங்கியது.

வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் தலைமையிலான வருவாய்த்துறையினர், இளநிலை பொறியாளர் ரமேஷ் தலைமையிலான வந்தவாசி பொதுப்பணித்துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் 42 வீடுகள், 18 கடைகள், 3 கோயில்கள், ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட 97 நபர்களின் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.

கீழ்க்கொடுங்காலூர் போலீசார் பாதுகாப்புடன், வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் தலைமையிலான வருவாய்த்துறையினர், இளநிலை பொறியாளர் ரமேஷ் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News