பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வழூர் கிராமத்தில் பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-14 14:01 GMT

பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட வழூர் ஊராட்சி பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை கட்டடம் கட்டித்தர வேண்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். .

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 140 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் 2 பழைய வகுப்பறை கட்டடங்களில், ஒரு பழுதடைந்த கட்டிடத்தை மட்டும் இடிக்க ஒன்றிய நிர்வாகம் அனுமதி அளித்தது.

ஆனால் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் 2 கட்டிடங்களையும் இடித்து விட்டார். இதனால் வகுப்பறைகள் எதுவும் இல்லாததால், மாணவர்கள், சிவன் கோவில், ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவற்றில் அமர்ந்து கல்வி படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம் கட்டித் தர வேண்டும்.

அனுமதியின்றி பள்ளிக்கூட கட்டிடம் இடிக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மன்ற நடவடிக்கைகளில், ஊராட்சி தலைவரின் கணவர் தலையீடு குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர் 

ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா பொன்னன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சின்னராஜ், லலிதா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News