திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கையிருப்பு இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சில இடங்களில் தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் இளங்காடு கிராமத்தில் 120 நபர்களுக்கு 11 மணிக்குள்ளாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது போதுமான தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் தடுப்பூசி போடுவதற்காக வந்து காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அதேபோல் கண்ணமங்கலம் அடுத்த கல்பட்டு மற்றும் இரும்புலி கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் தடுப்பூசி மருந்து காலியாகி விட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அறிவிக்கப்பட்டதால் காலை முதலே பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வந்தனர். ஆனால், பெரும்பாலான இடங்களில் போதிய தடுப்பூசி இல்லாததால் மக்கள் திரும்பிச் சென்றதும், மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைத்தால் நம்பி எப்படி வருவது எனவும் அவர்கள் வினவினர்.