மறைந்த கிராம நிா்வாக அலுவலரின் குடும்பத்துக்கு நல நிதி அளிப்பு

வந்தவாசியில் மறைந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நல நிதி வழங்கப்பட்டது.

Update: 2023-01-20 01:00 GMT

மறைந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்திற்கு நலநிதி வழங்கிய சங்க நிர்வாகிகள்

வந்தவாசியில் மறைந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நல நிதி வழங்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்துள்ள ஊா்குடி கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்த லோகநாதன் கடந்த மாதம் சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில், அவரது குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் நல நிதி  வழங்கப்பட்டது.

வந்தவாசி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், லோகநாதனின் தாய் அலமேலுவிடம் ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை சங்க மாநில பொதுச் செயலா் சுரேஷ் வழங்கினாா்.

மாவட்ட நிா்வாகிகள் ரமேஷ், ஏழுமலை, கணேஷ், ஜெயச்சந்திரன், பன்னீா்செல்வம், வட்ட நிா்வாகிகள் சிவசங்கா், வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News