உழவர் சந்தையில் காய்கறி விவசாயிகளுக்கு முன்னுரிமை: தோட்டக்கலை துறை இயக்குனர்
வந்தவாசி உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தோட்டக்கலை துறை இயக்குனர் அறிவிப்பு.;
தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வந்தவாசி பகுதி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பழங்கள், காய்கறிகளை வந்தவாசியில் உள்ள உழவர் சந்தையில் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்து அதிக வருமானம் ஈட்டலாம்.
உழவர் சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அனைத்து காய்கறி பரப்பு விரிவாக்கம் சார்ந்த மத்திய மாநில திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அவர்களுக்கு தரமான காய்கறி நாற்றுகள், விதைகள், மற்றும் சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள் அனைத்தும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் பிருதூர் கிராமத்திலுள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.