வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கு தபால் வாக்கு படிவங்கள்
வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கு தபால் வாக்கு படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்கு படிவங்களை வழங்கிய வட்டாட்சியர்
வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சி வந்தவாசியில் உள்ள ஒரு தனியாா் திருமண நடைபெற்றது. ஆரணி மக்களவைத் தொகுதி உதவித் தேர்தல் அலுவலா் சிவா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பொன்னுசாமி முன்னிலை வகித்தாா்.
இதில் பங்கேற்ற அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு தபால் வாக்குகளுக்கான படிவங்கள் 12,12-எ ஆகியவை வழங்கப்பட்டன. இவற்றை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நிறைவு செய்து அதிகாரிகளிடம் வழங்கினா். முன்னதாக, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மாநில துணைத் தலைவா் பிரபாகரன் தலைமையில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ஊா்வலமாக திருமண மண்டபம் சென்றடைந்தனா்.
தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தனியார் திருமண மண்டபத்தில் தபால் ஓட்டு படிவம் 12 , 12 எ தொடர்பான ஆய்வு கூட்டம் ஆரணி மக்களவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.
அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் தபால் ஓட்டு படிவம் 12, 12 எ பெற்று வழங்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்ததன் அடிப்படையில் நடைபெற்ற தபால் ஓட்டு படிவம் 12, 12 எ தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் வாக்குச்சாவடி நிலைய அலுவலருமான பிரபாகரன் தலைமையில் ஊர்வலமாக வாக்களிப்போம் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற முழக்கத்துடன் வந்து தங்கள் படிவம் 12, 12 எ ஆகியவற்றை உரிய இணைப்புகளுடன் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில் தேர்தல் வட்டாட்சியர் சதீஷ் மற்றும் துணை வட்டாட்சியர்கள் ,வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.