வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்தை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-01 08:01 GMT

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கருப்பு துண்டு அணிந்து திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

இதனை தொடர்ந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கருப்பு துண்டு அணிந்து திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் ரவி, நகர செயலாளர் பத்மநாபநாயுடு, ஒன்றிய செயலாளர்கள் முருகன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே போன்று வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு பா.ம.க. சர்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் வரதன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாலவேடு பாபு, வன்னியர் சங்க மச்சேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தேரடி பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஜார் வீதி வழியாக சென்று தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு ரத்து செய்யப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் மண்ணப்பன், இரும்பேடு சிவா மற்றும் பா.ம.க.வினர் கலந்துகொண்டனர்.

வன்னியருக்கான 10.5 சதவீத் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து போளூர் பஸ் நிலையம் அருகில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் க.ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் கலைமணி, பேரூராட்சி கவுன்சிலர் ஜோதி குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பாசறை பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News