வந்தவாசி அருகே தவளகிரி ஈஸ்வரர் மலையில் பற்றி எரிந்த தீ

வந்தவாசி அருகே ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலையில் பற்றி எரிந்த தீயில் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் கருகியது;

Update: 2022-04-01 13:54 GMT

வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் தவளகிரி ஈஸ்வரர் மலையில் தீப்பிடித்ததால் எரியும் மரங்கள் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் அரிய வகை மூலிகைச் செடிகள் மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1440 அடி உயரத்தில் ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலை உள்ளது. இந்த மலையில் அரியவகை மூலிகைச் செடிகள் மரங்கள் உள்ளன. இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் மலையில் தீ வைத்ததாக் கூறப்படுகிறது. இதன்காரணமாக மாலையின் ஒரு பகுதி மளமளவென தீ கொழுந்து விட்டு எரிந்தது.மலையில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் தீயில் எரிந்து கருகியது. மலையில் தீ பற்றியது குறித்து வனக் காவலர்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது மலை முழுவதும் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் தவித்து நின்றனர்.கோடை காலங்களில் மலை மீது தீ வைக்கும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. போலீசார் மலை மீது தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News