திருவண்ணாமலை மாவட்டத்தில் மனு நீதி நாள் முகாம்
Petition Status -திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, கலசப்பாக்கம், சேத்துப்பட்டு தாலுகாவில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.;
Petition Status - திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா இமாபுரம் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமுக்கு சேத்துப்பட்டு சமூக நல பாதுகாப்பு தாசில்தார் குமரவேல் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் ஒன்றியக்குழு தலைவர் இந்திரா இளங்கோவன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாண்டுரங்கன், பெரணமல்லூர் ஒன்றிய வட்டார அலுவலர்கள் மோகனசுந்தரம், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய் அலுவலர் சுப்பிரமணி, இமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பூவண்ணன் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக செய்யாறு உதவி கலெக்டர் வினோத்குமார் கலந்துகொண்டு, 112 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜான்சன் நன்றி கூறினார்.
வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதியினால் முகாமுக்கு மாவட்ட தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வட்டாட்சியர்கள் முருகானந்தம், சுபாஷ் சந்திர ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 38 பேருக்கு பட்டா மாற்றம், 6 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை, 73 பேருக்கு முதியோர் மற்றும் இகர உதவித்தொகை உள்ளிட்ட 128 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 30 பேருக்கு மக்களை தேடி மருத்துவம் திட்ட மருத்துவ பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.
முகாமில் துணை வட்டாட்சியர் ,வருவாய் ஆய்வாளர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள், மருத்துவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணான் குளத்தில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் தாசில்தார் ஜெகதீசன் பொதுமக்களிடமிருந்து 161 கோரிக்கை மனுக்கள் பெற்றார் அதில் 62 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா உள்பட பல்வேறு நல திட்டங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ,ஒன்றிய திமுக செயலாளர்கள் ,மண்டல துணை தாசில்தார் திருவேங்கடம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2