வந்தவாசி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரேஷ் வேட்பு மனு தாக்கல்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வந்தவாசி (தனி) சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்ய இரு இரு சக்கர வாகனத்தில் வந்து வட்டாட்சியர் அலுவலகம் வந்தார். திடீரென வட்டாசியர் அலுவலகம் அருகில் இருந்த குப்பைகளை அகற்றினார்.
பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாலட்சுமியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில். தமிழக அரசியலில் உள்ள குப்பைகளை அகற்றுவதே என முதல் பணி,
மக்களின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள குப்பைகளை அகற்றினேன், அதுபோல எனது தொகுதியில் மக்களுக்கு தேவையில்லாத அனைத்து குப்பைகளை அழித்து, தொகுதி மக்களை மன ஆரோக்கியத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வைப்பதே என லட்சியம் என கூறினார்.