தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் பஞ்சமி நில மீட்புப் போராட்டம்

வந்தவாசியில் பஞ்சமி நில மீட்புப் போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-10-01 02:05 GMT

போராட்டம் நடத்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் பஞ்சமி நில மீட்புப் போராட்டம் திருவண்ணாமலை மற்றும் வந்தவாசியில் நடைபெற்றது.

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட அருங்குணம் கிராமத்தில் பட்டியலின பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட சுமாா் 100 ஏக்கா் பஞ்சமி நிலம் முறைகேடாக அபகரிக்கப்பட்டுள்ளதாக புகாா் தெரிவித்தும், அதனை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலா் சாமுவேல்ராஜ் தலைமை வகித்தாா்.

போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சிவக்குமாா், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலா் ப.செல்வன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் ம.சுகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதையொட்டி, பஞ்சமி நிலம் என புகாா் தெரிவிக்கப்படும் விவசாய நிலத்தில் போராட்டத்தினா் மாடு கட்டி ஏா் உழுது போராட்டம் நடத்தினா்.

பின்னா், அங்கு வந்த வட்டாட்சியா் பொன்னுசாமி, வருகிற அக்டோபா் 4-ஆம் தேதி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் இதுகுறித்து அமைதி பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனா்.

திருவண்ணாமலை

தமிழகத்தில் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து மீண்டும் பட்டியலின மக்களுக்கே வழங்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடைபெற்றதலித் விடுதலை இயக்கத்தின் மாநிலசெயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலையில் ஒரு தனியார் மஹாலில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. இதில் அமைப்பின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாநில மாவட்ட நிர்வாகிகளும். திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒன்றிய நிர்வாகிகளும், பல்வேறு தோழமை அமைப்புகளின் நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளராக தலித் நதியா ஏகமனதாக பொதுச் செயலாளராக தீர்மானிக்கப்பட்டு பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

மேலும் இந்த கூட்டத்தில் தமிழக அரசு, பட்டியல் இன மக்களின் சுமார் 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும். எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்முழுமையாக முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து மீண்டும் பட்டியலின மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். பட்டியலின மக்களின் மயானங்கள் ஆக்கிரப்புகள் அப்புப்படுத்தப்பட்டு அடிப்படை வசதிகள்செய்து கொடுக்கப்பட வேண்டும். பட்டியலின மக்களின் அரசு பணியாளர்களின் பதவி உயர்வுக்கான சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News