திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வந்தவாசியில் புதிய ரேஷன் கடைகள் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆரணி பகுதியில் புதிய நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டது.;
நியாய விலைக் கடைகளை திறந்து வைத்த வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, ஆரணி பகுதியில் புதிய நியாய விலை கடை திறந்து வைக்கப்பட்டது
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் ஊராட்சியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் பகுதி நேர நியாய விலை கடைகள் திறக்கப்பட்டது . நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . சங்க செயலாளர் மாசிலாமணி வரவேற்றார்.
வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் நியாய விலை கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட குழு உறுப்பினர் மணி , கூட்டுறவு சங்க இயக்குனர் மோகன், மாவட்ட பிரதிநிதி தியாகராஜன், கூட்டுறவு சங்க அலுவலர்கள் ,ஊராட்சி மன்ற அலுவலர்கள் , உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆரணி
தேவிகாபுரம் அடுத்த முருகமங்கலம் கிராமத்தில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் செலவில் புதிய ரேஷன் கட்டிடம் கட்டி உணவுப்பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் சங்கர், ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் அடையாளம் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மண்ணு ஆகியோர் வரவேற்றனர்.
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கி புதிய ரேஷன் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் உணவு பொருட்கள் வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இதில் மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜ், மேற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, தேவிகாபுரம் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் செல்வம் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அடுத்த சின்ன புத்தூர் மற்றும் சின்ன ஐயம்பாளையம் கிராமங்களில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட இரண்டு நியாய விலை கடைகளை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
கண்ணமங்கலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சின்ன புதூர் நியாய விலை கடையில் 353 குடும்ப அட்டைகளும் சின்ன அய்யம்பாளையம் நியாய விலை கடையில் 338 குடும்ப அட்டைகளும் உள்ளன.
இந்த நியாய விலை கடைகள் ஞாயிறு செவ்வாய் வெள்ளி என்று இயங்கும் என செயலாளர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி பொறியாளர் சிவகுமார் ஆரணி வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.