ஒன்றியக் குழு கூட்டத்திற்கு அதிகாரிகள் வருவதில்லை; உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
வந்தவாசியில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை என உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
வந்தவாசியில் , வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது .
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம், ஒன்றிய குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது .ஒன்றியக்குழு துணைத் சேர்மன் பாபுவிஜயன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், பங்கேற்ற உறுப்பினர் தனசேகர் பேசும்போது, இரும்பேட்டில் உள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தாக்க தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. இது எப்பொழுது இடிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்துமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதே போல் குறிப்பேடு கிராமத்தில் உள்ள பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் திறக்க தொட்டி பழுதடைந்துள்ள காரணத்தினால் மேலே ஏறி யாரும் சுத்தப்படுத்துவதே இல்லை.
கீழ்நர்மா கிராமத்தில் ஊரின் அருகிலேயே சுடுகாடு இருப்பதால் பிணங்கள் எரியூட்டப்படும் பொழுது, வீட்டில் இருக்கக்கூடிய சிறுவர்கள் அச்சத்தில் உள்ளார்கள் எனவே அதற்கு உடனடியாக சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று பேசினார்.
ஒன்றிய குழு உறுப்பினர் சிவராஜ் பேசுகையில், தொடர்ச்சியாக ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தை அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். எத்தனை முறை கூறினாலும் அதிகாரிகள் வருவதே இல்லை. ஒவ்வொரு முறை வரக்கூடிய கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் குறிப்பெடுத்துச்செல்வதோடு சரி ஒவ்வொரு முறையும் புதுப்புது ஊழியர்கள் வருவதால் அந்த அந்த குறிப்புகள் என்ன ஆயிற்று எனவே தெரியவில்லை , எனவே அதிகாரிகள் வரும்வரை ஒன்றிய குழு கூட்டத்தை நடத்தக் கூடாது என்று பேசினார்.
பின்பு ஒன்றிய குழு தலைவரின் சமாதானத்தின் பெயரில் கூட்டம் தாமதமாக துவங்கி நடைபெற்றது.
பின்னா், பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பான தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில், வழக்கத்தை விட குறைவான ஒன்றிய குழு உறுப்பினர்கள், பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.