வந்தவாசியில் இரவு நேர ஊரடங்கு
வந்தவாசியில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வந்தவாசி பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வந்தவாசி காவல்துறையினர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், தேரடி பகுதி, ஐந்து கண் பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளுக்கு பசியைப் போக்கும் வகையில் சமூக ஆர்வலர்கள் உணவு வழங்கினர்.