புதியதாக போடப்பட்ட சாலை பெயர்ந்து போச்சு: உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

வந்தவாசி ஒன்றிய குழு கூட்டத்தில் சாலை தரம் குறித்து உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.;

Update: 2024-06-28 02:06 GMT

வந்தவாசி ஒன்றிய குழு கூட்டம்

வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம்-குறிப்பேடு தாா்ச் சாலை தரமற்று அமைக்கப்பட்டுள்ளதாக வந்தவாசி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை வட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், ஒன்றிய குழு சாதாரண கூட்டம், ஒன்றிய குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றியக்குழு துணைத் சேர்மன் பாபுவிஜயன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பங்கேற்ற பாமக உறுப்பினர் சக்திவேல் பேசும்போது,

கீழ்சீசமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து செயல்படும் தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

கீழ் சீசமங்கலம் கூட்டுச்சாலை குறிப்பேடு சாலை வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் போடப்பட்ட தார் சாலை பெயர்ந்து கிடக்கிறது. கீழ் சீசமங்கலம் கூட்டுச்சாலையில் இருந்து குறிப்பேடு சாலை வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைத் துறை மூலம் தார்ச் சாலை போடப்பட்டது. இந்த தார்ச் சாலை போடப்பட்ட 3, 4 தினங்களில் பெயர்ந்து கொண்டது என்ற அவர், ஒன்றிய கூட்டத்திற்கு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் வரவேண்டும் என்று பேசினார். மேலும் ஒன்றிய கவுன்சிலர்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேசினர்,  தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் பேசியபோது, வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட பணிகளை ஒப்பந்ததாரர்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், துணை பிடிஓ மாணிக்கவரதன், மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News