வந்தவாசி யோக நரசிம்மர் பெருமாள் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா

வந்தவாசி ஸ்ரீ யோக நரசிம்மர் பெருமாள் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

Update: 2024-05-23 01:00 GMT

சிறப்பு அலங்காரத்தில் யோக நரசிம்மர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅமிா்தவல்லி தாயாா் சமேத ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நரசிம்மர் பெருமாள் ஜெயந்தி விழா விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

தொடர்ந்து நம்மாழ்வாரின் அவதார நட்சத்திரதையொட்டி வந்தவாசி அடுத்த மேல் பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோயிலில் உள்ள நம்மாழ்வார் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நேற்று அதிகாலை நம்மாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீமாரியம்மன் தேரோட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரியகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கூழ்ஊற்றி தேரோட்டம் நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் வைகாசி மாதத்தில் கூழ்ஊற்றி தேரோட்டம் நடத்துவது வழக்கம்.

அதன்படி நிகழ்வாண்டு தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காப்பு கட்டுதல் மற்றும் பக்தர்கள் காப்பு கட்டுதல் விழா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தினமும் இரவில் சுவாமி வீதி உலா நடைபெற்று வீடு தோறும் அம்மனுக்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபாரதனை காண்பித்து கிராம மக்கள் வழிபட்டனர்.

நேற்று காலை ஸ்ரீ காளியம்மன் மாரியம்மன் க்கு சிறப்பு பூஜை செய்து கோயில் எதிரே கூழ் ஊற்றி வழிபாடு நடத்தினர்.

உற்சவர் சுவாமிகளை சிறப்பு அலங்காரம் செய்து தேரில் வைத்து கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் தேரோட்டம் நடைபெற்றது.

இந்த தேரோட்ட நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நீர் மோர் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News