வீட்டின் பூட்டை உடைத்து, பணம் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள்

வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2022-08-11 14:38 GMT

வந்தவாசி அருகே வீரம்பாக்கம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பஷீர் ( 44), இவர் தனது வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவர் தனது வீடு, கடையை பூட்டி விட்டு நேற்று இரவு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். இந்த நிலையில் இன்று காலை பஷீர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசாருக்கும், பஷீருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 22 கிராம் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News