தெள்ளார் ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோயிலில், தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி தெள்ளார் நகர முக்கிய வீதிகள் வழியாக, தேர் பவனி சென்றது. தேரில் முத்தாலம்மன் பவனி வந்து அருள்பாலித்தார். தெள்ளார் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தீயணைப்புத்துறை, மின்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், கிராம முக்கிய பிரமுகர்கள், கோயில் நாட்டாண்மைகாரர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.