ஒரே வார்டில் தாய்,மகள் போட்டி: வேட்புமனு தாக்கல்
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டில் தாய்,மகள் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல்;
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டில் தாய்,மகள் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட கோட்டீஸ்வரி நித்தியானந்தம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் அதிமுக சார்பில் போட்டியிட அதே தொகுதியில் கோடிஸ்வரியின் மகள் என்.பிரியா தினகரன் உதவி தேர்தல் அலுவலர் ஆனந்தகுமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.