மழைநீர் தேங்கிய பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு
வந்தவாசி பகுதியில் மழைநீர் தேங்கிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் நேரில் ஆய்வு;
வந்தவாசி கோட்டைக்குள் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 180 மாணவர்கள் பயின்று வருகின்றனர் . தொடர் பலத்த மழை காரணமாக பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் சிரமத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்காதவாறு மண் கொட்டி தரை மட்டத்தை ஏற்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பள்ளி கட்டிடத்தை அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் உஷாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் , தலைமை ஆசிரியை , பெற்றோர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்