வந்தவாசியில் இஸ்ரேலை கண்டித்து சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆா்ப்பாட்டம்

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து வந்தவாசியில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2023-10-27 11:51 GMT

வந்தவாசியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் அப்துல்காதா் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் யாசர் அராபத் , மாவட்ட பொருளாளர் முபாரக் முன்னிலை வகித்தனர்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் சிவக்குமாா், தையல் கலை தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் வீரபத்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலாளர் செல்வன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் அரிதாசு மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா்.

உள்ளூர் பாலஸ்தீன மக்களை கொல்லாதே, இஸ்ரேலிய அரசே அப்பாவி மக்களை கொல்லாதே, ஐ.நா. சபையே தலையீடு செய்து அமைதியை நிலை நாட்டு, காசா மருத்துவமனை மீது குண்டு வீசி பச்சிளம் குழந்தைகளை கொல்லாதே, அப்பாவி பெண்களை கொல்லாதே, நோயாளிகளை கொல்லாதே, இஸ்ரேலின் அட்டூழியத்தை கண்டிக்கிறோம்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொடுத்து விட்டு நேரடியாக அங்கு சென்று ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவை கண்டிக்கிறோம் , இங்கிலாந்தையும் கண்டிக்கிறோம், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய பிரதமரையும் கண்டிக்கிறோம் என போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர்கள் , ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் , சிபிஐ வட்டார செயலாளர், சி பி ஐ எம் எல் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் , உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு உறுப்பினர் இஸ்மாயில் நன்றி கூறினார்.

Tags:    

Similar News