கற்றல் திறன் சுற்றுச்சூழல் சுகாதாரம்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கோழிப் புலியூர் கிராமத்தில் அரசு பள்ளிகளில் கற்றல் திறன் சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு;

Update: 2022-03-27 03:49 GMT

பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு மாணவ மாணவி களிடம் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். 

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் கல்வி வட்டாரத்தில் 21 அரசு பள்ளிகளில் கற்றல் திறன் சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை சுகாதாரம் ஆகியவை குறித்து முப்பெரும் தொடக்க விழா சேத்துப்பட்டு அருகே உள்ள கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசி தலைமை  வகித்தார். ஆசிரியர் முரளி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். 

மேலும் பள்ளியில் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் சுமார் 40-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அமைப்பு விழாவை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். மாணவரிடையே சுற்றுச் சூழல் குறித்து பாட்டு மூலம் பாட்டுப்பாடி மாணவர்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் மற்றும் மரங்கள் மூலமாக மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் காற்று மாசுபடுவதை தடுப்பது ஆகியவை குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் விமலி, ஆனந்தி, சத்யா மற்றும் தொண்டு நிறுவன பொறுப்பாளர் யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News