நகராட்சி வார்டு வேட்பாளர்களுக்கு ரூ.34 ஆயிரத்துக்கு மேல் செலவினம் கூடாது

நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினம் ரூ.34 ஆயிரத்துக்கு மேல் இருக்கக்கூடாது என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-02-09 13:27 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வந்தவாசி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வந்தவாசி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

கூட்டத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முஸ்தபா தலைமை தாங்கினார். துணை அலுவலர்களான அகத்தீஸ்வரன், ஆனந்த்குமார் ஆகியோர் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினர்.

அப்போது வேட்பாளர்கள் சுவரொட்டிகள், பேனர்கள் வைக்கக்கூடாது, 20 பேருக்கு மேல் பிரசாரத்துக்கு செல்லக் கூடாது, ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்யக்கூடாது, தேர்தல் செலவினம் ரூ.34 ஆயிரத்துக்கும் மேல் இருக்கக்கூடாது, என தேர்தல் நடத்தும் அலுவலர் முஸ்தபா கூறினார். ஏற்பாடுகளை நகராட்சி அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News