பஞ்சமி நிலத்தை மீட்க கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நூதன போராட்டம்

வந்தவாசியில் பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நூதன போராட்டம்;

Update: 2022-06-11 06:40 GMT

தாசில்தார் முருகானந்தத்திடம் மனு கொடுத்தனர்.

வந்தவாசியில் பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கோரிக்கை எழுதப்பட்ட பதாகையை கழுத்தில் கட்டி தொங்க விட்டு தாலுகா அலுவலகம் முன்பு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு உறுப்பினர் மோகன், வக்கீல் சுகுமார் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வந்தவாசி தாலுகாவுக்கு உட்பட்ட அருங்குணம் கிராமத்தில் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. அதில் 90 ஏக்கர் நிலம் மாற்றுச் சமுதாயத்தினர் முறைகேடாக அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நாங்கள் இந்த நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர். பின்னர் தாலுகா அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்ற அவர்கள் தாசில்தார் முருகானந்தத்திடம் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News