பெரணமல்லூர் ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு

ஒன்றிய அலுவலக கட்டிடம் , பெரணமல்லூர் வந்தவாசி இடையே புதிய பேருந்து வசதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

Update: 2024-07-30 02:01 GMT

ஒன்றிய அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்த  அம்பேத்குமார் எம் எல் ஏ

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து பெரணமல்லூர் - வந்தவாசி இடையே செல்லும் புதிய டவுன் பேருந்தை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர்  அம்பேத்குமார் தொடங்கி வைத்தர். வந்தவாசியிலிருந்து பெரணமல்லூருக்கு காரனை, தேன்சேந்தமங்கலம், எறும்பூர், ஊர்குடி, தக்கண்டராயபுரம், வல்லம், அணைபோகி, தாடிநொளம்பை வழியாக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த அரசு டவுன் பேருந்தை மீண்டும் இயக்க கோரி பொதுமக்கள் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்று கடந்த 5 ஆண்டிற்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு டவுன் பேருந்தை இயக்கபோக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி மீண்டும் நிறுத்தப்பட்ட டவுன் பேருந்தை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்நிலையில் தாடிநொளம்பை கிராமத்தில் தடம் எண் 3 என்ற புதிய டவுன் பேருந்தை இயக்கும் விழா நடந்தது. விழாவிற்கு எம்எல்ஏ அம்பேத்குமார் தலைமை வகித்து கொடியசைத்து டவுன் பேருந்தை இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டுங்கன், பேரூராட்சிமன்றத் தலைவர் வேணி ஏழுமலை, சேர்மன் இந்திரா இளங்கோவன், முன்னாள் சேர்மன் ராமசாமி, டவுன் பஞ். துணை தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் , போக்குவரத்து துறை அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News