அம்பேத்கர் சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு
வந்தவாசி பேருந்து நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்டுள்ள அம்பேத்கார் சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது.;
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், அம்பேத்கார் சிலை மற்றும் மணிமண்டபத்தை திறந்து வைத்து பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே 1988 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், தலைமை வகித்தார். எஸ்சி எஸ்டி அலுவலர்கள் நல சங்க மாநிலத் துணைத் தலைவர் நடராஜன் வரவேற்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன், புரட்சி அம்பேத்கர் நூற்றாண்டு இயக்க நிறுவனர் இயேசு மரியன் ஆகியோர் அம்பேத்கார் சிலை மற்றும் மணிமண்டபத்தை திறந்து வைத்து பேசினார். இதில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.