வந்தவாசியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் கைது

வந்தவாசியில் இந்து முன்னணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களில் 43 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-07-22 11:15 GMT

வந்தவாசியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

கோயில்களை விட்டு அரசை வெளியேற வலியுறுத்தி தடையை மீறி இந்து முன்னணியினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 43 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தேரடி பகுதியில், இந்து முன்னணி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. நகர பொதுச்செயலாளர் கார்த்தி அனைவரையும் வரவேற்றார்.

ரஜினி ரசிகர்களும் கொண்டாடிய கமல் படம்! அஜித் ரசிகர்களுக்கு பிடித்த விஜய் படம்!

தமிழகத்தில் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் இவற்றின்மையமாக விளங்கும் கோயில்களை நாத்திக ஹிந்து விரோத திராவிட மாடல் அரசு தொடர்ந்து சீரழித்து வருகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல ஆயிரம் கோயில்கள் இடிந்த நிலையில் சிதிலமடைந்து சீரழிந்து கிடக்கிறது. பல ஆயிரம் கோவில்களில் விளக்கு இல்லை வழிபாடு இல்லை ஒரு கால பூஜை கூட நடைபெறுவது இல்லை. தரிசனகட்டணம், அரச்சனை கட்டணம், நேர்த்திக்கடன் கட்டணம், விளக்கு பூஜை கட்டணம், மொட்டை அடிக்க கட்டணம், காதுகுத்த கட்டணம் எனபல பெயர்களில் கோவில்களில் கட்டண கொள்ளை அடிக்கப்படுகிறது.

இந்து கோவில் திருவிழாவிற்கு கூடுதல் கட்டணத்துடன் அரசு பேருந்துகள். ஆனால் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்ல ஒரு நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம். மக்கள் வரிப்பணத்தில் சர்ச், மசூதி ஊழியர்களுக்கு இரு சக்கர வாகனம் ஆனால் கோவில் ஊழியர்களுக்கு எதுவும் இல்லை. நாகூர் தர்காசந்தனக்கூடு நடத்த 45 கிலோ சந்தன மரம், இலவசம் ரம்ஜான் நோன்பு கஞ்சி கொடுக்க 70 லட்சம் கிலோ அரிசி இலவசம். ஆனால் ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்ற அரசு எதுவும் தருவதில்லை. மசூதி, சர்ச் சீரமைக்க கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு செலவிடுகிறது. கோயில்களை பராமரிக்க அரசு எதுவும் தருவதில்லை என்ற முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம், நகர பொருளாளர் சீனிவாசன்,நகர துணை தலைவர்கள்,   ராஜேஷ் கோபிநாத், பரத்வாசன் நகர செயலாளர்கள் பரசுராமன், சந்தோஷ் ,  பாஸ்கரன், நகர செயற்குழு உறுப்பினர்கள் இராகுல், கார்த்திக்   மற்றும்  குரு, ஜெய்கணேஷ், ஜான், இந்து முன்னணி நிர்வாகிகள்  உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததால் 43 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News