அரசம்பட்டு அரசு பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் சத்துணவு சாப்பிட்டு ஆய்வு
அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் சத்துணவு சாப்பிட்டு ஆய்வு செய்தாா்.;
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது மாணவ-மாணவிகளுக்கு வழங்கிய சத்துணவை சாப்பிட்டு பார்த்தார். தினமும் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது, தினமும் முட்டை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் உஷாராணி வடிவேல், தலைமை ஆசிரியர் சீனிவாசன், ஆசிரியர்கள் அரங்கநாதன், அய்யாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.