திமுக வட்ட செயலாளர்களுக்கு கணையாழி அணிவித்த எம்பி..!

நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு பெற்றுத் தந்த வட்ட செயலாளர்களுக்கு, எம் பி கணையாழி வழங்கினார்,;

Update: 2024-08-15 02:43 GMT

திமுக வட்ட செயலாளர்களுக்கு கணையாழி அணிவித்த தரணி வேந்தன் எம் பி

நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு பெற்றுத் தந்த திமுக வட்ட செயலாளர்களுக்கு ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் கணையாழி வழங்கினார்.

வந்தவாசியில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு பெற்றுத் தந்த திமுக வட்ட செயலாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வந்தவாசி நகரப்பகுதியில் திமுகவிற்கு அதிக வாக்குகள் பெற்றுத்தந்த வட்ட செயலாளர்கள் கெளரவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட செயலாளரும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. நகர திமுகவைத் தலைவர் நவாப் ஜான் முன்னிலை வகித்தார். நகர திமுக செயலாளர் தயாளன் அனைவரையும் வரவேற்றார்.

வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுகவின் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு அதிக வாக்குப் பெற்றுத்தரும் வார்டுகளின் திமுக வட்ட செயலாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படிமுதலிடம் பெற்ற வந்தவாசி 8 ஆவது வார்டின் வட்டச்செயலாளர் சாகுல் அமீதிடம் ஒரு சவரன் மோதிரமும், இரண்டாவது இடம்பெற்ற 3-ஆவது வார்டு வட்டச் செயலாளர் அப்துல் ரசூலிடம் அரை சவரன் மோதிரமும், மூன்றாம் இடம் பெற்ற 4 -ஆவது வார்டு வட்டச் செயலாளர் நூர்முகம்மதிடம் கால் சவரன் மோதிரமும் வழங்கி ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். மற்ற வார்டு கிளைச் செயலாளர்களும் பொன்னாடை போர்த்தி பாராட்டப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, நகர மன்ற தலைவர் ஜலால், துணைத்தலைவர் அன்னை சீனிவாசன், கோகுல கிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் குடியரசு, பாபு, நகர துணைசெயலாளர் சையது ரஹீம் அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ரஜினி, முன்னாள் நகர துணைச் செயலாளர் பாலசுந்தர், பொறியாளர் அணி யுவராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் அன்பரசு கரீம், மகேந்திரன், அசினா கன்செய்யது மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News