வந்தவாசி நகராட்சியில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்

வந்தவாசி நகராட்சியில் பழைய கட்டட மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் பழைய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.;

Update: 2022-05-23 07:39 GMT

நகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த ஆவணங்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஒட்டியுள்ள பழைய கட்டிடத்தில் நகர நில அளவையர் அலுவலகம், இ சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையம் ஆகியவை இயங்கி வருகிறது.

இந்த கட்டிடத்தின் மாடியில் உள்ள சிமெண்ட் ஷீட் வேய்ந்த பகுதியில் நகராட்சியின் பழைய பில் புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. இதில் பழைய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News