தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து

வெண்குன்றம் கிராமத்தில் தவளகிரீஸ்வரர் கோவில் மலை தீப்பற்றி எரிந்தது.;

Update: 2024-05-11 07:23 GMT

 தீப்பற்றி எரிந்தத தவளகிரீஸ்வரர் கோவில் மலை

வந்தவாசி வெண்குன்றம் தவளகிரி ஈஸ்வரர் மலைக்கு சமூக விரோதிகள் தீ வைத்ததால் அரியவகை மரங்கள் தீயில் கருகின.

வந்தவாசியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் 1500 அடி உயரமுள்ள தவளகிரி மலையில் தவளகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். பவுர்ணமி அன்று பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபடுவர்.

வந்தவாசி அடுத்த வெண்குன்றம் அருகே தவளகிரி ஈஸ்வரர் மலை உள்ளது. இந்த மலையை சுற்றி பெரிய பரப்பளவில் அடர்ந்த காடுகள் உள்ளன. இதில் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் வளர்ந்துள்ளன. இதனை வனத்துறை அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு வந்தவாசி பகுதியில் போதியளவு மழை பெய்ததால் வனப்பகுதியில் மூலிகை செடிகள், மரங்கள் அனைத்தும் செழிப்பாக வளர்ந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு மலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்தது.

தீ விபத்தால் மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத்துறையினரும், வனத்துறையினரும் தீைய அணைத்தனா்.. மேலும், இதுகுறித்து, வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தவளகிரி மலையில் அடிக்கடி தீ விபத்து நடக்கிறது. இதனால் மலையில் உள்ள மூலிகைச் செடிகள், மரங்கள் எரிந்து சேதமடைகின்றது.

தீ வைக்கும் மர்ம நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மழையை வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும்

மலையை சுற்றிலும் நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News