சாலையோரம் கிடந்த 40 ஆயிரம் பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஐந்தாம் வகுப்பு மாணவி
வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் சாலையோரத்தில் கிடந்த 40 ஆயிரம் பணத்தை கண்டெடுத்த ஐந்தாம் வகுப்பு மாணவி கோதை
வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் சாலையோரத்தில் கிடந்த 40 ஆயிரம் பணத்தை கண்டெடுத்த ஐந்தாம் வகுப்பு மாணவி கோதை ஊராட்சி மன்ற தலைவரிடம் பணத்தை ஒப்படைத்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் 40 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஆய்வாளர் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி கோதைக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
மேலும் காவல்துறை அதிகாரிகளும், பொதுமக்களும், ஆசிரியர்களும், சிறுமிக்கு பாராட்டு தெரிவித்தனர்.