வந்தவாசி ஒன்றியத்தில் உள்ள ஏரி நீர் வரத்து கால்வாய்களை தூர்வார கோரிக்கை

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில் ஏரி நீர் வரத்து கால்வாய்களை தூர்வார உறுப்பினர்கள் கோரிக்கை

Update: 2021-10-30 08:14 GMT

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்,  பருவமழை தொடங்கவுள்ளதால், வந்தவாசி ஒன்றியத்தில் உள்ள ஏரி நீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் பள்ளிகளை தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கவேண்டும்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொய்வில்லாமல் தொடர வேண்டும் போன்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் பேசினர்.

ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியக்குழு தலைவர் உறுதியளித்தார்.  கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News