வந்தவாசி அருகே சாலை அகலப்படுத்தும் திட்டம் பற்றி கோட்ட பொறியாளர் ஆய்வு

வந்தவாசி அருகே ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க திட்டத்தை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.

Update: 2022-08-25 11:01 GMT

சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தார்  சென்னை கோட்ட பொறியாளர் விசாலாட்சி.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் தேசூர் -தெள்ளார் இடையே குண்ணகம்பூண்டி-வெடால் இணைப்பு சாலையை  அகலப்படுத்த ரூ.1 கோடியே 10 லட்சம் மதி்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை சென்னை கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு) விசாலாட்சி, வரைபடத்தை வைத்து பணிகள் நடைபெற உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் செய்யாறு கோட்டபொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ராஜகணபதி, வந்தவாசி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன், சாலை ஆய்வாளர் அஜீஸ்உல்லா, மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News