வந்தவாசி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வந்தவாசி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-15 01:08 GMT

 கற்றல் திறன் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

வந்தவாசி அடுத்த செட்டிக்குளம் ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளாறு ஒன்றியம் கூனம்பாடி ஊராட்சி மதுரா குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வினை மேற்கொண்டார். இதில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்ட அமைப்பு மேம்பாடு திட்டத்தில் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வகுப்பறையை பார்வையிட்ட அவர் பணிகளை தரமாக முடிக்க சொல்லி அறிவுறுத்தினார்.

பின்னர் உட்புறச் சுவர்களில் தவறாக வரையப்பட்ட சித்திரங்களை சுட்டிக் காட்டியவர் அதை சரி செய்யுமாறு அறிவுறுத்தினார். அருகில் உள்ள சமையலறையில் தயாரிக்கப்பட்ட உணவை ருசி பார்த்த அவர் மேலும் சுவையை கூட்டி உணவு தயாரிக்குமாறு அறிவுறுத்தினார். கழிப்பறை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டார். அங்கன்வாடி கட்டிடத்தை புதிதாக அமைக்க வழிமுறைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது செய்யாறு துணை ஆட்சியர் பல்லவி வர்மா, துறை இயக்குனர் யுவராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள்,வட்டாட்சியர் பொன்னுசாமி ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,  வட்டார கல்வி அலுவலர்கள் ,  தலைமை ஆசிரியர்கள் ,  ஆசிரியர்கள், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News