வாக்கு எண்ணும் மையங்களில் டிஐஜி ஆய்வு

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் டிஐஜி ஆய்வு செய்தார்.

Update: 2022-02-15 01:12 GMT

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் டிஐஜி ஆய்வு செய்தார். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான செய்யாறு, வந்தவாசி நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா,  நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருகின்ற   22 ம் தேதி  செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் வேலூர் சரக டிஐஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அறையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், கட்சி முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் மையத்துக்கு செல்வதற்காக தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வழிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுராமன், டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வந்தவாசி நகராட்சியில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் டிஐஜி ஆய்வு மேற்கொண்டு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் முஸ்தாபா, டிஎஸ்பிக்கள், தேர்தல் அலுவலர்கள், காவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News