மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க கூட்டம்

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது

Update: 2024-06-01 02:53 GMT

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க பேரவை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போடு உரிமைகளுக்கான பெரணமல்லூர் ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது

கூட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் சேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவாஜி, பொருளாளர் சத்யா, துணை செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும், முழு கூலியாக ரூபாய் 319 வழங்க வேண்டும். பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்பன வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் ஒன்றிய தலைவர் பெருமாள், கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் முருகன், அறிவியல் இயக்கம் சார்பில் பழனி , பேரூராட்சி உறுப்பினர் கௌதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரணமல்லூர் வட்டார செயலாளர் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்.

தொடர்ந்து ஒன்றிய குழு நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னதாக செயலாளர் திருமாவளவன் அனைவரையும் வரவேற்று பேசினார். வட்டார பொருளாளர் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.

காரல் மார்க்ஸின் பிறந்த நாளையொட்டி செங்குடை ஊர்வலம்

திருவண்ணாமலையில் காரல் மாா்க்சின் 206-ஆவது பிறந்த நாளையொட்டி செங்குடை ஊா்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை-வேலூா் சாலை, அண்ணா நுழைவு வாயிலில் இருந்து தொடங்கிய ஊா்வலத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா்கள் பத்ரி, சிந்தன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து ஊா்வலத்தை தொடங்கிவைத்துப் பேசினா்.

திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் வரை நடைபெற்ற இந்த ஊா்வலத்தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வீரபத்திரன், செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் , நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News