வந்தவாசியில் மணல் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஆன்லைன் மணல் விநியோகத்தை மீண்டும் தொடங்ககோரி வந்தவாசியில் மணல் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கினர்;

Update: 2021-07-15 07:05 GMT

மாதிரி படம்

வந்தவாசி வட்டாரத்தில், 100க்கும் மேற்பட்ட மணல் அள்ளும் லாரிகள் இயங்குகின்றன. இந்த லாரிகளுக்கு மணல் லோடு அரசாங்கம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து மணல் பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் மணல் விநியோகம் நிறுத்தப்பட்ட காரணத்தால் லாரி உரிமையாளர்கள் வருவாய் இன்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

தங்கள் நிலையை பலமுறை அரசுக்கு கோரிக்கையாக வைக்கும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி வந்தவாசி வட்டார லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்கள் லாரிகளுடன் காத்திருப்பு போராட்டத்தை காலை முதல் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News