அரசு பள்ளியில் பயிற்சிக்கு வந்த ஆசிரியைக்கு கொரோனா: பள்ளி தற்காலிகமாக மூடல்

வந்தவாசி அருகே இளங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிற்சிக்கு வந்த ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது

Update: 2021-09-10 07:55 GMT

இளங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு வந்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 35 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் பயிற்சி பெறும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று, நாளை, நாளை மறுநாள் அரசு விடுமுறை என்பதால் பள்ளி மூடப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை அன்று பள்ளிக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News