வந்தவாசியில் நகாராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
வந்தவாசி நகராட்சி சார்பில் ஐந்து கண் பாலம் அருகே நடந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சி சார்பில் ஐந்து கண் பாலம் அருகே பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வந்தவாசி நகராட்சி ஆணையர் டி.உஷாராணி (பொறுப்பு), வந்தவாசி வட்டாட்சியர் ஜி.திருநாவுக்கரசு, வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.