வந்தவாசியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்
வந்தவாசியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்.
வந்தவாசியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் கொட்டப்படும் குப்பைகளை தினமும் சுழற்சி அடிப்படையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றி வந்தனர். இவர்களுக்கு நாள்தோறும் ஒப்பந்த அடிப்படையில் ரூ.300 ஊதியம் வழங்கப்பட்டது.
இந்த ஊதியத்தை உயர்த்தி கேட்டு தூய்மை பணியாளர்கள் நகராட்சி நிர்வாகத்திடமும், ஒப்பந்ததாரரிடமும் பலமுறை கேட்டு வந்துள்ளனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்தம் எடுத்தவர்கள் எந்த விதமான பதிலும் கூறாமல் இருந்தனர்.
இந்த நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 70-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 11 மணி அளவில் நகராட்சி வளாகத்தில் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் ஜலால் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எங்களுக்கு பல ஆண்டுகளாக ஒரு நாளைக்கு ஒருவருக்கு நபர் வீதம் 300 ரூபாய் ஒப்பந்தம் எடுத்தவர் தருகிறார். இந்த ஊதியத்தை வைத்துக்கொண்டு இன்றைய அதிக விலைவாசியில் , இந்த காலக்கட்டத்தில் குடும்ப நடத்த முடியாத நிலையில் இருக்கிறோம. இதனால் நகரில் உள்ள குப்பைகளை அல்லாமல் ஊதிய உயர்வு கேட்டு நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
அதற்கு நகராட்சி தலைவர் ஒப்பந்தம் எடுத்தவரிடம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நகராட்சி தலைவர் ஒப்பந்தம் எடுத்தவரிடம் போனில் தொடர்பு கொண்டு நேரில் வந்து பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் ஒப்பந்ததாரர் அங்கு வந்து தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். வந்தவாசி நகராட்சி வளாகத்தில் ஒப்பந்த தூய்மை பணி பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 7 மணி அளவில் முடிந்தது.