வந்தவாசி அருகே புதிய மின்மாற்றி இயக்கி துவக்கி வைப்பு
வந்தவாசி அருகே புதிய மின் மாற்றியை எம்.பி., எம்.எல்.ஏ இயக்கி துவக்கி வைத்தனர்.;
வந்தவாசி கே.எஸ்கே நகர் பகுதியில் புதிய மின் மாற்றியை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் , வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் , ஆகியோர் இயக்கி துவக்கி வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கே.எஸ் கே நகர் பகுதியை சேர்ந்த கே.எம் கார்டன் மற்றும் திப்பு சுல்தான் நகர் பகுதியில், புதிய மின் மாற்றி துவக்கும் நிகழ்ச்சி செயற் பொறியாளர் சர வண தங்கம் தலைமையில் நடைபெற்றது.
இளநிலை பொறியாளர் பஞ்சமூர்த்தி முன்னிலை வகித்தார். நகரமன்ற உறுப்பினர் அசீனா அனைவரையும் வரவேற்றார்.
பிருதூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கே எஸ் கே நகர் பகுதியைசேர்ந்த கே.எம் கார்டன் மற்றும் திப்பு சுல்தான் நகர் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் சரி செய்யும் பொருட்டு புதியதாக நிறுவப்பட்ட 63 கிலோவாட் திறன்கொண்ட ரூ 5 இலட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில், புதிய மின் மாற்றியை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார் ஆகியோர் மின் நுகர்வோர்களுக்கு பயன்பெறும் பொருட்டு மின் மாற்றியை இயக்கி பொதுமக்களின் பயன்பாட்டு க்கு கொண்டு வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், உதவி செயற் பொறியாளர்கள் ஜெகநாதன், தெள்ளாறு. நாராயணன், சசி குமார் நகர மன்ற தலைவர் ஜலால், நகர திமுக செயலாளர் தயாளன், நகர மன்ற துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், திமுக பொருளாளர் ராஜாபாஷா , மின்வாரிய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் , ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் , ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கே. எஸ் கே நகர் பகுதியை சேர்ந்த கே. எம் கார்டன் மற்றும் திப்பு சுல்தான் நகர் பொதுமக்கள் பங்கேற்றனர்.