வந்தவாசியில் ரூ. 82 லட்சத்தில் தார்ச்சாலை: திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வு

வந்தவாசி பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை, திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2022-01-08 08:00 GMT

வந்தவாசி பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வங்காராம் ஊராட்சியில்,  100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ரூபாய் 2.60 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்று நடும் பணியை,  மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஏற்கனவே கடந்த 2 வருடத்திற்கு முன் நடப்பட்ட மரக்கன்றுகளை ஆய்வு செய்து,  தொடர்ந்து பராமரிக்க வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கயநல்லூர் கிராமத்தில் நடைபெற்று வரும் ரூபாய் 82 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும்,  சாலை பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது சாலையில் பள்ளம் தோண்டி எந்த மாதிரியான ஜல்லிக்கற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், கூடுதல் ஆட்சியர் பிரதாப், கிராம நிர்வாக அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் ,ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News