தெள்ளாரில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாரில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

Update: 2021-08-31 07:21 GMT

தெள்ளார் தீயணைப்பு நிலையம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, தெள்ளாரில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த தீயணைப்பு நிலையத்தை காணொலிக் காட்சி வாயிலாக சென்னையில் இருந்தவாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தெள்ளார் புதிய தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை வட மேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் குத்துவிளக்கு ஏற்றினார். மாவட்ட அலுவலர் முரளி, அபேதநந்தா கல்லூரி நிர்வாக இயக்குனர் மணி,  ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Tags:    

Similar News